Thursday, 21 July 2011

புதுமை பாரதி

சுட்டும் விழி சுடர் தான் - கண்ணம்மா
சூரிய சந்திரரோ

வட்டக் கரிய விழி - கண்ணம்மா
வானக்கருமை கொல்லோ

பட்டுக்கருநீல புடவை 
பதித்த நல்வைரம் 

நட்டநடுநிசியில் தெரியும்
நட்சத்திரங்களடி

சோலைமலர் ஒளியோ - உனது
சுந்தரப்புன்னகைதான்

நீலக்கடலலையே - உனது
நெஞ்சின் அலைகளடி

கோலக்குயில் ஓசை - உனது 
குரலின் இனிமையடி 

வாலைக்குமரியடி - கண்ணம்மா 
மருவக் காதல் கொண்டேன்

சாத்திரம் பேசுகிறாய் - கண்ணம்மா
சாத்திரம் ஏதுக்கடி

ஆத்திரம் கொண்டவர்க்கே - கண்ணம்மா 
சாத்திரம் உண்டோடி

மூத்தவர் சம்மதியில் - வதுவை 
முறைகள் பின்பு செய்வோம்

காத்திருப்பேனோடி இது பார்
கன்னத்து முத்தம் ஒன்று...

No comments:

Post a Comment