Tuesday 23 August 2011

கூட்டுப்புழு கட்டிய கூடு கல்லறை அல்ல...
சிலபொழுதுகள் போனால் சிறகு வரும் மெல்ல...

Thursday 21 July 2011

புதுமை பாரதி

சுட்டும் விழி சுடர் தான் - கண்ணம்மா
சூரிய சந்திரரோ

வட்டக் கரிய விழி - கண்ணம்மா
வானக்கருமை கொல்லோ

பட்டுக்கருநீல புடவை 
பதித்த நல்வைரம் 

நட்டநடுநிசியில் தெரியும்
நட்சத்திரங்களடி

சோலைமலர் ஒளியோ - உனது
சுந்தரப்புன்னகைதான்

நீலக்கடலலையே - உனது
நெஞ்சின் அலைகளடி

கோலக்குயில் ஓசை - உனது 
குரலின் இனிமையடி 

வாலைக்குமரியடி - கண்ணம்மா 
மருவக் காதல் கொண்டேன்

சாத்திரம் பேசுகிறாய் - கண்ணம்மா
சாத்திரம் ஏதுக்கடி

ஆத்திரம் கொண்டவர்க்கே - கண்ணம்மா 
சாத்திரம் உண்டோடி

மூத்தவர் சம்மதியில் - வதுவை 
முறைகள் பின்பு செய்வோம்

காத்திருப்பேனோடி இது பார்
கன்னத்து முத்தம் ஒன்று...

Thursday 14 July 2011

சங்கமும் வைரமும்...

குறுந்தொகை
யாயும் ஞாயும் யாரா கியரோ
எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர்
யானும் நீயும் எவ்வழி யறிதும்
செம்புலப் பெயனீர் போல
அன்புடை நெஞ்சம் தாங்கலந் தனவே.
                                  - செம்புலப்பெயனீரார்


இருவர்
யாயும் ஞாயும் யாராகியரோ நென்று நேர்ந்ததென்ன 
யானும் நீயும் எவ்வழி அறிதும் உறவு சேர்ந்ததென்ன
ஒரே ஒரு தீண்டல் செய்தாய் உயிர்க்கொடி பூத்ததென்ன 

செம்புலம் சேர்ந்த நீர்த்துளி போல்
அன்புடை நெஞ்சம் கலந்ததென்ன
                                                  - வைரமுத்து

Sunday 9 January 2011

மௌனராகம்

மழையில் நனைந்தது ஒரு மின்னல்...
வெண்ணிலா என்னெதிரில்
விண்ணீரில் கரைந்தது அவள் கண்ணீர்...
சோகம் ஏனடி?
பிரிவா? நினைவா?
வார்த்தைகள் விளக்குமோ!!!
என் விழியோரம்-
ஒரு மௌனராகம்...

Monday 5 July 2010

அம்மா

தவமிருந்தேன் தனிமையில்...
உன் முகம் காண-
-கருவறையில் நான்..!!!